மதுப்பிரியர்களுக்கு உற்சாக செய்தி.. புதுச்சேரியில் நியூ இயர் பீர் திருவிழா.. Unlimited Foods & Beer

x

ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதுச்சேரியில் பீர் திருவிழா நடைபெற்று வருகிறது.

2024ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்குள்ள விடுதிகள் மற்றும் பீட்ச் ரெசார்ட்களில் அறைகள் நிரம்பி வருகின்றன. இதேபோல், விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அளவற்ற உணவு மற்றும் மதுபானம் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சிகளுக்கான கட்டணம் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பீர் திருவிழாவில் ரோஜா இதழ், பூசணிப் பழம், வெட்டிவேர் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பீர்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன


Next Story

மேலும் செய்திகள்