சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு - மேயர் இருக்கை முன் அமர்ந்து கவுன்சிலர் தர்ணா

x

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு - மேயர் இருக்கை முன் அமர்ந்து கவுன்சிலர் தர்ணா

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு - மேயர் இருக்கை முன் அமர்ந்து கவுன்சிலர் தர்ணா

மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாய் தேர்வாகி, தமிழக முதல்வரால்

விருது பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மேயர் ராமச்சந்திரன் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், விருதுக்கு தற்போதைய மாமன்றம் மட்டும் காரணம் அல்ல,

கடந்த அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களும் காரணம் என்று தெரிவித்தார். அப்போது, அதிமுக மற்றும் திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, மாறி மாறி யார் சாதனையாளர்கள் என்ற பேச்சைவிட்டு, பொதுமக்களுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்ககோரி,

விசிக மாமன்ற உறுப்பினர் இமயவர்மன், மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்