முன்னாள் ராணுவ வீரர் மீது சரமாரி தாக்குதல் - தேர்தலைப்புறக்கணிக்கும் கிராம மக்கள்?

x

ராமநாதபுரத்தில் முன்னாள் ராணுவ வீரர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சவேரியார் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த 61 வயது குழந்தை என்பவர் ராணுவ வீரராக பணியாற்றியவர். இவர், தொழிலுக்காக மாறாந்தை கிராமத்திற்கு ஜேசிபி இயந்திரத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது குழந்தையை வழிமறித்த ஆப்பனூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் முருகானந்தம், தனது ஆதரவாளர்களுடன் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் புகார் அளித்த நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கருப்புக் கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்