"தீய சக்திகள் வரும்..."பதறும் ஊர் மக்கள்...

x

"தீய சக்திகள் வரும்..."பதறும் ஊர் மக்கள்...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், சுடுகாடு அமைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சின்னகல்லுபள்ளி ஊராட்சியில் சுடுகாடு

அமைக்க 20 செண்ட் இடத்தை வருவாய் துறையினர் ஒதுக்கியுள்ளனர். அந்த இடத்தை தூய்மைப்படுத்த ஒரு தரப்பினர் சென்ற போது, அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு

தெரிவித்தனர். சடலங்களை எரித்தால் துர்நாற்றம் வீசும் எனவும், தீய சக்திகள் வரும் எனவும் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இரு தரப்பினரையும் சமாதானம்

செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்