இறந்த பின்னும் 2 பொண்டாட்டிக்காரருக்கு சுடுகாட்டில் நேர்ந்த கதி.. போலீஸ் குவிப்பு

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இறுதி சடங்கு செய்வதில், முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டதில், இரண்டு பேருக்கு மண்டை உடைக்கப்பட்டது.

சோமலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சின்னப்பனுக்கு இரு வேறு சமூகத்தினை சேர்ந்த மனைவிகள் உள்ளனர்.

அவர் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்த நிலையில், சின்னப்பனுக்கு இறுதிச்சடங்குகள் செய்வதிலும் இறுதி ஊர்வலத்தின் போது நடனம் ஆடுவதிலும் இரண்டு தரப்பினருக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

இதில், இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது. சின்னப்பனின் உறவினரான தாமோதரன் என்பவரது வீட்டை மற்றொரு தரப்பினர் அடித்து நொறுக்கியுள்ளனர்.

முதல் மனைவியான கமலாவிற்கு வெண்ணிலா என்ற ஒரு மகளும் மற்றொரு மனைவியான மலருக்கு ஜெயகுமார், ஜெயபிரியா இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கொல்லி வைக்க மாற்று சமூகத்தை சேர்ந்த மலரின் மகன் ஜெயகுமாருக்கு உரிமை மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே,

அசம்பாவிதங்களை தடுக்க சோமலாபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்