"அனைவருக்கும் சம ஊதியம் வேண்டும்"... உத்தரவுக்கு தடை ..

x

கோவில் ஊழியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

நெல்லை பெரியநம்பி நரசிம்ம கோபாலன், அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில்களில், ஊழியர்கள், அர்ச்சகர்கள், மணியம் உள்ளிட்டோருக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி சம ஊதியம் வழங்குமாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யபட்டது. கோயிலின் வருமானத்தை பொறுத்தே ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் என்றும், அனைத்து கோவில் பணியாளர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்க முடியாது என்றும் மனுவில் கோரப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்தது.


Next Story

மேலும் செய்திகள்