கனத்த இதயத்தோடு வேக வேகமாக கடம்பூர் ராஜூ வீட்டிற்கு சென்ற ஈபிஎஸ் | AIADMK | EPS

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் தந்தை மறைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று கடம்பூர் ராஜுவிற்கு ஆறுதல் கூறினார். சில தினங்களுக்கு முன்பு கடம்பூர் ராஜுவின் தந்தை செல்லையா மரணம் அடைந்தார். இந்நிலையில், கோவில்பட்டி அருகே சிதம்பரபுரம் கிராமத்தில் உள்ள கடம்பூர் ராஜுவின் இல்லத்துக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, கடம்பூர் ராஜுவிற்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவரது தந்தையில் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com