"உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையே"தேர்தலின் போது பள்ளியில் வீசப்பட்ட குப்பைகள்

x

தேர்தல் பணிக்கு வந்தவர்கள் பள்ளியின் வளாகத்தில் உணவுக்கழிவுகளை போட்டுச் சென்றது குறித்து சிறுமி ஒருவர் வீடியோ வெளியிட்ட நிலையில் உடனடியாக அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட முகப்பேர் வேணுகோபால் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில்

தேர்தலின் போது இங்கு பணியாற்றிய அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு உணவு, குளிர்பானம், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவற்றை சாப்பிட்டு விட்டு கழிவுகளை ஆங்காங்கே சிலர் போட்டுவிட்டுச் சென்றதாகவும், மேலும் பள்ளி வகுப்பறையில் இருந்த ஸ்லாப்புகளையும் சிலர் உடைத்துப் போட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை விமர்சித்து அந்த பள்ளியைச் சேர்ந்த யுகேஜி மாணவி அகிம்சா பேசிய வீடியோ வைரலாக பரவியது...


Next Story

மேலும் செய்திகள்