லஞ்ச புகாரில் கைதான ED அதிகாரியின் மனு.. இன்று விசாரணை

x

லஞ்ச புகார் வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்

நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை அங்கித் திவாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்