முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொ.செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம்..

x

சேலம் முத்துமலை முருகன் கோயிலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தார். புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள 146 அடி உயர முருகன் சிலை உள்ள கோயிலுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். வேல் பகுதிக்கு சென்ற அவர், அங்கு பால் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கோயிலை சுற்றி தேரை இழுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்