மின் ஊழியர்கள் போராட்டத்தின் எதிரொலி.. வருகைப்பதிவு விவரம் கேட்கும் மின் வாரியம்

x

மின் ஊழியர்கள் போராட்டத்தின் எதிரொலி.. வருகைப்பதிவு விவரம் கேட்கும் மின் வாரியம்

ஊழியர்களின் வருகைப்பதிவு விவரங்களை காலை 11 மணிக்குள் சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மக்களுக்கான பணிகள் மற்றும் சேவைகள் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்

பணிபுரிய முன்வரக்கூடிய ஊழியர்களை தொழிற்சங்க பிரதிநிதிகள் தடுத்திடாத வகையில் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்கிடவும் பணிக்கு வராமல் கையொப்பமிடாதவர்களின் பட்டியலை தயார் செய்து உடனடியாக காலை 11 மணிக்குள் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்