குளத்து நீரில் கலக்கும் சாயக்கழிவு - மக்கள் செய்த தரமான சம்பவம்

x

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் சாய சலவை தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் நல்லா ஓடையில் வெளியேற்றுவதால் குளத்து நீர் மாசடைந்துவிட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கிராம மக்களின் குறைத் தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியது முதலே கடந்த மாத கூட்டத்தில் தெரிவித்த புகார் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கை வழங்குமாறு கேட்டு அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிராம மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டதால் அதிகாரிகள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினர். கூட்டம் முடிந்த பிறகும், சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என வலியுறுத்தி அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்