"திராவிடம்,தமிழ்நாடு,தமிழன்" ட்விட்டரில் பேசிவரும் தமிழக தலைவர்கள்..

x

"திராவிடம்,தமிழ்நாடு,தமிழன்" ட்விட்டரில் பேசிவரும் தமிழக தலைவர்கள்..

அமெரிக்காவில் உள்ள ரயில் சேவை நிறுவனமான AMTRAK, ஒரு வார்த்தையில் TRAINS என பதிவிட, அதை ஒட்டி பலரும் ஒரு வார்த்தையை பதிவிட துவங்கினர். உலக

தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் ஒரு வார்த்தையை பதிவிட்டு வரும் நிலையில், தமிழக அரசியல் தலைவர்களும் டுவிட்டரில் ஒரு வார்த்தையை பதிவிட்டுள்ளனர்.

அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் "திராவிடம்" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி "தமிழ்நாடு" எனவும், பா.ஜ.க மாநில தலைவர்

அண்ணாமலை "தமிழன்" எனவும் பதிவிட்டுள்ளனர். இதே போன்று, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் "சமூகநீதி" எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை

வைகோ "மனிதநேயம்" எனவும் பதிவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்