தீபாவளியால் சென்னை தி.நகர் போக்குவரத்தில் அதிரடி மாற்றம் - அக்.24 வரை ஆட்டோக்கள் செல்ல தடை

x

தீபாவளியால் சென்னை தி.நகர் போக்குவரத்தில் அதிரடி மாற்றம் - அக்.24 வரை ஆட்டோக்கள் செல்ல தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்துக் காவல்துறை சில மாற்றங்களை செய்துள்ளதாக

அறிவித்துள்ளது. அதன்படி வரும் 24 ஆம் தேதி வரை தணிகாசலம் சாலை சந்திப்பு, ரோகிணி சிக்னல் சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை, பிருந்தாவன்

சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தி.நகர் செல்லும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்கள் இரவு 11 மணி

முதல் காலை 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி, பாஷ்யம்

சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் தண்டபாணி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில், விடுமுறை

நாட்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்