ஒரு போன் போட்டால் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும் சாராயம் - பரபரப்பு காட்சிகள்

x

ஒரு போன் போட்டால் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும் சாராயம் - பரபரப்பு காட்சிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருசக்கர வாகனம் மூலம் சென்று டோர் டெலிவரி போன்று சாராயம் விற்கப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், அமையகரம், பூண்டி, வாசுதேவனூர் ,ராயப்பனூர் ஆகிய பகுதிகளில்

சாராயம் விற்பனை செய்வது இடம் பெற்றுள்ளது. சுத‌ந்திர தின விழாவின்போது சாராயம் விற்பனை நடைபெற்றதாக தந்தி டிவியில் செய்தி வெளியானதால் காவலர்கள்

இடமாற்றம் செய்யப்பட்டனர். இருந்தாலும், சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்

கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்