மீனாட்சி அம்மன் கோயிலில் காணிக்கை வசூல் எவ்ளோ தெரியுமா ? - வெளியான முக்கிய தகவல்

x

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 1 கோடியே 34 லட்சத்து 74 ஆயிரத்து 759 ரூபாய் காணிக்கை ரொக்கமாக எண்ணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், 378 கிராம் தங்கம், 843 கிராம் வெள்ளி மற்றும் 225 வெளிநாட்டு பணமும் பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்