திமுக முப்பெரும் விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
திமுக முப்பெரும் விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள விரிவான கடிதத்தில், செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும்
வந்து விடும் என்று கூறியுள்ளார். அதை நினைவு படுத்தும் விதமாக வரும் 15-ம் தேதி விருதுநகரில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில்,
தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி, பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்க உள்ளதாக கூறியுள்ளார். இந்த விழாவில், கடல் இல்லா விருதையில்,
பொங்குமாங்கடல் புகுந்ததோ என நினைக்கும் அளவுக்கு திமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story