தீபாவளி பண்டு சீட்டு போட்ட நபர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி.. மக்களே உஷார்.. உஷார்.. உஷார்..!

x

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த கலா வாரச்சீட்டு, ஆடிமாத சீட்டு உள்ளிட்டவைகளை நடத்தி வந்த நிலையில், அவரிடம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கூலிதொழிலாளர்கள் பணம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீட்டு தவணைகள் முடிந்தும் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த கலா, திடீரென தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த கூலி தொழிலாளர்கள், கலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது குறித்த புகாரின் பேரில், வெளிமாவட்டத்திற்கு தப்பி செல்ல முயன்ற கலாவை ஈரோடு பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்..


Next Story

மேலும் செய்திகள்