"இவங்க இல்லாம தீபாவளியா?" - ரூ.1.5 கோடிக்கு சேல்ஸ் - ஆடுகள் விற்பனை அமோகம்

x

கோவை மாவட்டம் அன்னூர் கால்நடை சந்தையில் ஆடுகள், விற்பனை அமோகமாக நடைபெற்றது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து குவிந்த வியாபாரிகள், ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். எடைக்கு ஏற்ப ஒரு ஆடு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் விற்பனையானது.

இதன் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்