ஈபிஎஸ்-க்கு நெருக்கமானவரின் கட்டடங்களை ஆய்வுசெய்ய அனுப்புய சம்மனை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

x

ஈபிஎஸ் நெருக்கமான ஆர்.இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளையின் கல்வி நிறுவன கட்டடங்களை ஆய்வு செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக பதவி வகித்த இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, இளங்கோவன் அறங்காவலர்களாக உள்ள முசிறியில் உள்ள கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை குறித்த விவரங்களை வழங்கக் கோரியும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், இளங்கோவனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் அறங்காவலர் என்.அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் புலன் விசாரணையின்போது ஆதாரங்களை சேகரிக்கும் விசயத்தில் தலையிட முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்