போதை ஆசாமியின் வெறிச்செயல் - கொலையில் முடிந்த வாக்குவாதம்

x

திண்டுக்கல் அருகே குடிபோதையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் காந்தி நகர் ரயில் தண்டாவாளம் அருகே மது அருந்திய நாகராஜ் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், முருகன் தலை மீது கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஒடி இருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்