"அப்டேட் ஆகப்போகும் தனுஷ்கோடி" - வெளியான குட் நியூஸ்

x

தனுஷ்கோடியில் 5 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் ஆய்வு அவர், தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தர, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ராமநாதபுரத்திற்கு கடந்த 4 மாதங்களில், ஒரு கோடியே 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக நடராஜபுரத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமையவுள்ள இடத்தை, அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்