மறைந்த பிரபல டான்சர் ரமேஷின் இன்ஸ்டா அக்கவுண்ட் ஹேக்

x

சின்னத்திரை நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டான்சர் ரமேஷ். இன்ஸ்டாவில் 65 ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்களை கொண்டிருந்த இவர், நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். இவர் கடந்தாண்டு ஜனவரி மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், டான்சர் ரமேஷின் மறைவுக்கு பிறகு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மூடப்படாததால், அந்த அக்கவுண்ட்டை சைபர் கிரைம் மோசடி கும்பல் ஹேக் செய்து பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ரமேஷின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆன்லைன் டிரேடிங் குறித்தான ஸ்டேட்டஸ்கள் வைத்து கும்பல் மோசடி செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நடிகரும், பிரபல நடன இயக்குநருமான பிரபுதேவாவின் புகைப்படத்தை, ரமேஷ் ப்ரொபைல் பிக்சராக வைத்திருப்பதால், அதை பார்த்து பலர் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்வார்கள் என கும்பல் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது போல், இறந்தவர்கள் மற்றும் நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பவர்களின் சமூக வலைதள கணக்குகளை கும்பல் ஹேக் செய்வதாகவும், அதன் மூலம் ஆன்லைன் டிரேடிங் குறித்து விளம்பரம் செய்து மோசடி செய்து வருவதாகவும் கூறும் போலீசார், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்