புயல் பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழுவினர் - பொதுமக்கள் வைத்த முக்கிய கோரிக்கை

x

சென்னை வேளச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த மத்திய குழுவிடம், பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான குழுவினர் சென்னை வந்துள்ளனர். அவர்கள், இரு குழுக்களாக பிரிந்து, சென்ன மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். குணால் சத்யார்த்தி தலைமையிலான குழு, வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி, புவனேஸ்வரி நகர், கல்கி நகர், செல்வா நகர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. கல்கி நகரில், தங்களுக்குத் தற்காலிக தீர்வாக இல்லாமல் நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, மத்திய அரசின் சார்பில் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குழுவினர் ப‌தில் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்