கறிக்கடை ஊழியர் வெட்டிக் கொலை...முன் விரோதத்தால் நடந்த பயங்கரம்...

x

திண்டுக்கல்

ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்...

தொடர் கொலைகளால் அலறி கிடக்கும் திண்டுக்கல்...

கறிக்கடை ஊழியர் வெட்டிக் கொலை...

முன் விரோதத்தால் நடந்த பயங்கரம்...

இறந்த நண்பனின் குடும்பத்திற்கு உதவியதால் விபரீதம்...

உதவியவரை வேட்டையாடிக் கொன்ற எதிரிகள்...

மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக் கொலை...

வீட்டுக்குள் புகுந்து மர்ம கும்பல் வெறிச்செயல்...

முத்தழகுபட்டியில் அருளானந்த பாபு கொலை...

பொன்னிமாந்துறையில் இருளப்பன் கொலை....

ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு படுகொலைகளால் அன்று ஒட்டுமொத்த திண்டுக்கல் மாவட்டமும் அச்சத்தில் அரண்டு கிடந்தது.

இரண்டு கொலைகளுக்கான பகீர் பின்னணியை அறிய விசாரனையில் இறங்கியது நமது குற்றசரித்திரம் நிகழ்ச்சிக்குழு.

ஒப்பாரி ஓசையும் அலறல் சத்தமும் தான் அன்று ஆர்வி நகர் பகுதியை தட்டி எழுப்பியது.

கன்னிமார் தேவதைகள் தெருவில் உள்ள முள்காட்டில் ரத்தக்காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலத்தை போலீசார் மீட்டு ஆம்புலென்சில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

ரத்தமும் சதையுமாக கொல்லப்பட்டு கிடந்தவர் முத்தழகு பட்டியை சேர்ந்த அருளானந்த பாபு.27 வயதான இவர் படித்து முடித்துவிட்டு ஒரு கறிக்கடையில் கூலி வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அருளானந்தபாபுவை வழிமறித்து வெட்ட முயற்சித்திருக்கிறது ஒரு மர்ம கும்பல்.

அந்த தாக்குதலில் இருந்து தப்பி, முள்காட்டிற்குள் ஓடி இருக்கிறார் அருளானந்த பாபு. ஆனால் விடாமல் விரட்டிய கும்பல் அவரை வெட்டி சரித்து விட்டு தப்பி ஓடி இருக்கிறது.

சடலத்தை மீட்டு மருத்தவமனைக்கு அனுப்பிய போலீசார் கொலைக்கான காரணத்தை தேடி விசாரனையில் இறங்கி இருக்கிறார்கள். அப்போது தான் இரண்டு கோணங்களில் விசாரனை தீவிரமடைந்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லில் சகோதரர்களான சக்திவேல், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டனர். அப்படி கொல்லப்பட்ட சக்திவேலின் நண்பர் தான் இந்த அருளானந்த பாபு. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் சில நாட்களில் விசாரனைக்கு வருகிறது. வழக்கிற்கான முழு வேலைகளையும் அருளானந்தபாபு முன்னின்று செய்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சக்திவேலின் குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்துள்ளார்.

இதனால் எதிர் தரப்பினர் அருளானந்தபாபுவை தீர்த்துகட்டி இருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த முத்தழகு பட்டி திருவிழாவில் அருளானந்தபாபு யாருடனாவது சண்டை போட்டு, அந்த முன்விரோதத்தில் கொலை நடந்ததா என்றும் விசாரித்து வருகின்றனர்.

இப்படி ஒருபுறம் அருளானந்த பாபு வெட்டி வீசப்பட்டு கிடக்க, அடுத்த சில நொடிகளிலேயே ஆத்தூர் அடுத்த பொன்னிமாந்துறை புதுப்பட்டி பகுதியை சேர்ந்த இருளப்பனை வீடு புகுந்து வெட்டிக்கொன்றுள்ளது ஒரு கும்பல்.

அந்த கோரத்தின் சாயல் தான் இங்கே உறைந்திருக்கும் குருதி ஓட்டம்.

40 வயதான இருளப்பன் கொத்தனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஹேமலதா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று மதிய உணவு சாப்பிட்டு உறங்கிய இருளப்பனை, மனைவி ஹேமலதாவின் கண்முன்னே ஒருகும்பல் வெட்டி விட்டு தப்பி இருக்கிறது.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நிலத்தகராறில் இருளப்பன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்.

முழு விசாரனைக்கு பிறகே இரண்டு கொலைகளுக்குமான காரணம் தெரியவரும்.

சிறு சிறு பிரச்சனைகளுக்கான தீர்வு கொலையாக மாறி வருவது திண்டுக்கல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்