பயிர் காப்பீட்டு திட்டம் - ரூ.2057.25 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்துவற்காக தமிழ்நாடு அரசு ரூ.2057.25 கோடி நிதியினை அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது...
x

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்துவற்காக தமிழ்நாடு அரசு ரூ.2057.25 கோடி நிதியினை அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டில் தமிழ்நாட்டில் எதிர் வரும் சிறப்புப் பருவம் மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்த இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம், இப்கோ-டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்டிஎப்சி எர்கோ மற்றும் ரிலையன்ஸ் போன்ற ஐந்து காப்பீட்டு நிறுவனங்களை அரசு தேர்ந்தெடுத்துள்ளது. மேலும், 2022-23 ஆம் ஆண்டில் விவசாயிகளின் சார்பாக, காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக 2,057 கோடியே 25 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் நிதியினை அனுமதித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்