"உஷாரய்யா.. உஷாரு.." - மீண்டும் தலைவிரித்த Online மோசடி

x

சென்னை புழலை சேர்ந்த ஞானவேல், தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறார். அண்மையில் இவரது செல்போனுக்கு வந்த அழைப்பில், வங்கி வாடிக்கையாளர் மையத்தில் இருந்து பேசுவதாக பெண் ஒருவர் கூறியுள்ளார். கிரெடிட் கார்டுக்கு ஆண்டு சேவை கட்டணம் வந்துள்ளதாகவும், அதில் இருந்து விலக்கு பெற, இணையத்தில் சில தகவல்களை பதிவேற்றுமாறும் கூறியுள்ளார். ஓ.டி.பி. உள்ளிட்டவற்றை ஞானவேல் பதிவு செய்தபோது, 50 ஆயிரத்து 647 மற்றும் 9 ஆயிரம் என, இரு முறை பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் கேட்டபோது தவறுதலாக எடுக்கப்பட்டதாகவும், வங்கிக்கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும் என்றும் கூறியதாக தெரிகிறது. எனினும் பணம் வரவு வைக்கப்படாததால், மோசடி குறித்து புழல் காவல்நிலையத்தில் ஞானவேல் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்