நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. அரசு பேருந்து ஜப்தி.!! காரணம் என்ன.?

x

நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. அரசு பேருந்து ஜப்தி.!! காரணம் என்ன.?


திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியாகள் ஜப்தி செய்தனர். வடமதுரை அருகே உள்ள சீலபாடியான்

களத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வடமதுரையில் அரசு பேருந்து மோதியதில் பலியானார். இதையடுத்து நஷ்ட ஈடு கேட்டு அவரது மனைவி ஜோதியம்மாள்

தொடர்ந்த வழக்கில், கடந்த 2020ம் ஆண்டு வீராசாமியின் மனைவிக்கு 8 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பணம்

வழங்கப்படாததால் வேடசந்தூர் அரசு போக்குவரத்து பணிமனை பேருந்தை நீதிபதி சரவணக்குமார் ஜப்தி செய்யக் கூறி உத்தரவிட்டதன் பேரில், இன்று நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி

செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்