கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு - தேதி அறிவிப்பு..

x

கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 16ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில், 16 ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மற்றும் முன்னாள் ராணுவ வீர‌ர்களின் வாரிசுகளுக்கும், 17ஆம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், நேரடியாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. 18ஆம் தேதி, பிடெக் உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு முதல் சுற்று கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறும். கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்