கஞ்சா விற்ற காவலர்கள் - மாவட்ட எஸ்பி எடுத்த அதிரடி ஆக்‌ஷன்! - நீலகிரியில் பரபரப்பு

x

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீசார் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக எஸ்.பி.ஆசிஸ்ராவத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது எருமாடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த அமரன் இதில் ஈடுபட்டது உறுதியானது. தேனியில் போலீசாக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணேசன், சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக பணியாற்றிய உடையார் உள்ளிட்டோர் சேர்ந்து கொண்டு கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இதில் ஈடுபட்டதும் உறுதியானது... இதன்பேரில் விவேக், கணேசன், உடையார், அமரன் என 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் அமரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மற்றவர்கள் தலைமறைவான நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்