பிரபல செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொடரும் ரெய்டு - அதிரடி காட்டும் IT

x

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை, ஸ்ரீபெரும்புத்தூர், கடலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். புதுச்சேரி, தவளக்குப்பம் பகுதியில் உள்ள கன்னி மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்ற நிலையில், இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்