டேங்கர் லாரி மீது மோதிய கண்டெய்னர் லாரி... சேலம் - பெங்களூரு சாலையில் பரபரப்பு | Accident

x

தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி ஒன்று, சாலையின் மறுபுறம் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் சேலம் - பெங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் வினோத் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 3 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.


Next Story

மேலும் செய்திகள்