போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு..! முகமது பைசிலை கைது செய்த அதிகாரிகள்..!

போதைப் பொருள் கடத்தி வரும் கும்பலுடன் தொடர்புடையவர் தையூரில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது...
x

போதைப் பொருள் கடத்தி வரும் கும்பலுடன் தொடர்புடையவர் தையூரில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது.

  • இதுகுறித்து அவர்கள் சோதனை நடத்திய போது முகமது பைசில் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது கஞ்சா, அபின் போன்ற பொருட்களை கடத்தும் கும்பலுடன் முகமது பைசில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
  • இலங்கையை பூர்வீகமாக கொண்ட முகமது பைசில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
  • டில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியேறிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள கழிப்பட்டூர் என்ற இடத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்பத்துடன் குடியேறி உள்ளார்.
  • கைது செய்யப்பட்ட முகமது பைசிலிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக அவரிடம் இருந்து டிஜிட்டல் சாதனங்கள், லேப்டாப், கைபேசி, சிம்கார்டு, இலங்கை பாஸ்போர்ட், இந்தியா பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்