மங்காத்தா விளையாடிய போது மோதல் ;வெடிகுண்டு வீசி, அரிவாளால் தாக்குதல்? - 3 பேர் கைது
மங்காத்தா விளையாடிய போது மோதல் ;வெடிகுண்டு வீசி, அரிவாளால் தாக்குதல்? - 3 பேர் கைது
திருச்சி சின்ன சூரியூரில் மங்காத்தா விளையாடிய போது ஏற்பட்ட மோதலில், இருவர் படுகாயமடைந்தனர். சின்ன சூரியூரில், பணம் வைத்து மங்காத்தா விளையாடிய போது, ரவுடிகளுக்குள்
மோதல் ஏற்பட்டு, வெடிகுண்டு வீசியும், அரிவாளால் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த
நவல்பட்டு போலீசார், மூன்று பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து அரிவாள், வெடி மருத்துகள், இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story