"டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்டம்"...தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி நிலையம் திறப்பு - இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கி சிறப்பிப்பு

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே,

டாக்டர் .பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் இலவச கணினி மற்றும் தட்டச்சு பயிற்சி நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. வேலாயுதபுரத்தில் நடைபெற்ற விழாவில் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், மாநில பொதுச் செயலாளர் ஜெகதீஷ் சௌந்தர் முருகன், ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தட்டச்சு பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தனர். 3 லட்ச ரூபாய் மதிப்பிலான கணினி தட்டச்சு பயிற்சி இயந்திரம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும், அன்னதானம் வழங்கியும் சிறப்பித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்