தொடர் விடுமுறை நிறைவு - தென் மாவட்டத்தில் இருந்து படையெடுத்த மக்கள் - "இடிக்காம ஏறுங்கப்பா... ஏய்"

x

தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் தங்களது பணியிடங்களுக்கு படையெடுத்த மக்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது...

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களால், அப்பகுதியை சேர்ந்தவர்கள், தங்களது இரு சக்கர வாகனங்களில் சாலையைக் கடக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர்..

நெல்லையில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, ஒரே நேரத்தில் அங்குள்ள பேருந்து நிலையத்தில் மக்கள் கூடியதால், பேருந்துகளில் இடம் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்...

மதுரை ரயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிக அளவில் நிரம்பி வழிந்தது.

இதனால், பயணிகள் தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரத்தை அதிக அளவில் பயன்படுத்தினர்

தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் கோவையை நோக்கி ஒரே நேரத்தில் படையெடுக்க தொடங்கியதால், சிங்காநல்லூர் பேருந்து நிலைய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன....


Next Story

மேலும் செய்திகள்