சத்துணவு வழங்குவதில் முறைகேடு புகார்... திடீரென சோதனை நடத்திய அதிகாரிகள்.. அதிர்ந்து போன ஊழியர்கள்!
ஓசூர் அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு சத்துணவு வழங்குவதில் முறைகேடு நடந்து வருவது அதிகாரிகளின் அதிரடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 420 மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இதில் முறைகேடு நடப்பதாக புகார் எழவே, அப்பள்ளியில் வட்டார மருத்துவ குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 420 மாணவிகளுக்கு 63 கிலோ அரிசி சமையல் செய்ய வேண்டிய நிலையில், தினமும் 30 கிலோ அரிசி மட்டுமே சமைக்கப்பட்டு வந்ததும், 300 மாணவிகளுக்கு மட்டுமே முட்டை வழங்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து வட்டார மருத்துவ குழுவினர், இந்த முறைகேடுகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
Next Story