போட்டி தேர்வுகள்... மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் நற்செய்தி - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

போட்டி தேர்வுகள்... மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் நற்செய்தி - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
x

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வினை எழுதுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களித்து அரசு ஆணையிட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும் தொகுதி 1, 2 2A போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில், முதன்மை எழுத்துத்தேர்வான கட்டாய தமிழ்மொழித்தாள் தகுதி தேர்வில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.கட்டாய தமிழ் மொழித் தாளிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான விலக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் மற்ற தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்