நெருங்கி வரும் தீபாவளி... எகிறும் டிமாண்ட் - சென்னையில் களைகட்டும் விற்பனை

x

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து புத்தாடைகளை வாங்கி செல்கின்றனர். மேலும், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் ஜவுளிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தி.நகர் பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்