பேருந்தில் தகராறு செய்த கல்லூரி மாணவர்கள் - பேருந்தை நிறுத்தி போலீசாரிடம் ஓட்டுநர் புகார்

x

பேருந்தில் தகராறு செய்த கல்லூரி மாணவர்கள் - பேருந்தை நிறுத்தி போலீசாரிடம் ஓட்டுநர் புகார்

திருவள்ளூர் மாவட்டம் போளூர் அருகே அரசுப்பேருந்தில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு சத்தங்கள் எழுப்பி

வந்துள்ளனர். அதை நடத்துநர் எச்சரித்த நிலையில், 2 மாணவர்களும் நடத்துநர் மற்றும் ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்தை

பாதியில் நிறுத்திய ஓட்டுநர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார், 2 மாணவர்களை மட்டும் பேருந்தை இறக்கி

விட்டனர். மாணவர்களிடம் விசாரணை செய்தபோது, ஒரு மாணவனின் கன்னத்தில் காவல் உதவி ஆய்வாளர் பளாரென அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்