"எம்மதமும் சம்மதம்.." அனைத்து மத ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்

x

கோவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 23 ஏழை எளிய ஜோடிகளுக்கு, அவரவர் மத வழக்கப்படி ஒரே மேடையில் இன்று திருமணம் நடைபெற்றது. 23 ஜோடிகளுக்கும் 10 கிராம் தங்கமும், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட பொருட்களும் திருமண சீர்வரிசையாக வழங்கப்பட்டன. மேலும் விழாவில் கலந்துகொண்ட சுமார் 2,000 பேருக்கு அசைவ விருந்தும் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்