குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கூட்டம்;அதிகாரிகளுக்கு டீ கொடுத்த சிறுவன்..! கலெக்டர் ஆபிசில் அதிர்ச்சி

x

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தைகள் உரிமை சார்ந்த பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனையின் போது, 10 வயது சிறுவன் அவர்களுக்கு தேநீர் வழங்க கேனுடன் சென்ற சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

பெரம்பலூரில், வரும் 11-ம் தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குழுவினர் முகாம் நடத்த உள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் அதிகாரிகளுடன், ஆட்சியர் கற்பகம் இன்று ஆலோசனை நடத்தினார். அதில் குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகாரளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார். அப்போது அரசு அலுவலர்களுக்கு தேநீர் வழங்குவதற்காக 10 வயது சிறுவன் டீ கேனுடன் அலைந்துகொண்டு இருந்தான். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து ஆட்சியர் ஆலோசனை செய்யும் போது, வெளியில் 10 வயது சிறுவன் டீ கேனுடன் சென்றது அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதா என கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்