முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2-வது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு

x

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2-வது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு

திமுகவின் பொதுக்குழு வரும் 9-ம் தேதி சென்னையில் அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்ட அமைப்பு பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான முடிவுகள் 30ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என தகவல்

வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம், சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி

உள்ளது. இந்த கூட்டத்திற்கு, புதிய நிர்வாகிகள் புதிய பொதுக்குழு தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஐந்தாயிரம் பேர்

அழைக்கப்பட உள்ளனர். ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையிலும், முதலமைச்சரான பின், நடைபெற உள்ள

பொதுக்குழு என்பதாலும், பிரம்மாண்ட வரவேற்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்