மகன் இறந்தது கூட தெரியாமல் உடலுடன் வசித்த தாயால் அதிர்ச்சி - சென்னையில் பயங்கரம்.. கதறும் தந்தை

x

சென்னை பல்லாவரத்தில் மகன் இறந்தது கூட தெரியாமல் சடலத்துடன் வசித்த, மனநலம் பாதிக்கப்பட்ட தாயால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால், உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது, வீட்டினுள் இருந்த ஒரு அறையில் இளைஞரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அவர் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படும் நிலையில், மற்றொரு அறையில் அவரது தாய், எதுவும் தெரியாதது போல் நடமாடிக் கொண்டிருந்துள்ளார். விசாரணையில், சடலமாக கிடந்தது 23 வயதாக இளைஞர் விஷ்ணு என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட தாய் உமாவுடன் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. விஷ்ணுவின் தந்தை பட்சிராயன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், விஷ்ணுவின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகினற்னர்.


Next Story

மேலும் செய்திகள்