ரூ.6000 நிவாரணம் ... வழிகாட்டு நெறிமுறைகள் அமைச்சர் ஆலோசனை

x

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை வழங்க மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்