#JUSTIN || வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்.. வெளியான முக்கிய தகவல்

x

மிக் ஜாம் புயல் எதிரொலி.

வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களுக்கு பாதிப்புகளுக்கு ஏற்ப இன்சூரன்ஸ் தொகை கணக்கிடும் பணி தீவிரம்.

சென்னை மாநகரில் ஏற்கனவே உள்ள 500 கணக்கிட்டாளருடன் கூடுதலாக தமிழக முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 100 கணக்கிட்டாளர்கள் வருகை

வாகனங்களைத் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய சிறு குறு தொழில் நிறுவனங்களின் இழப்பீட்டிற்கான பாதிப்பு கணக்கிடும் பணியும் தீவிரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாதிப்புகளுக்கு ஏற்ப இன்சூரன்ஸ் தொகை கணக்கிடும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது இதுவரை சுமார் 10,000 மேற்பட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை கணக்கிடப்பட்டிருப்பதாகவும்

மொத்தமுள்ள 30 முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 17 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இதுவரை வாகனங்களுக்கான வெள்ள பாதிப்பை ஏற்பட்டிருப்பதாக வாடிக்கையாளர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் 50 சதவீத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் Claim செய்யப்பட்டு வழங்கப்பட்டிருப்பதாக கணக்கீடாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த சில வாரங்களில் வெள்ள பாதிப்பால் வாகனம் சேதம் குறித்தான முழுமையான தகவல்கள் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி வாகனத்தில் Floor வரை , Seat வரை , Dash Board வரை என மூன்று வகைகளாக பாதிப்புகள் கண்டறியப்பட்டு எந்த அளவில் வெள்ள நீர் புகுந்ததோ அதற்கு ஏற்ப claim தொகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த வகையில் Electronic Board loss வாகனங்களுக்கு மொத்தமாகவும் மற்ற வாகனங்களுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தோராயமாக பாதிப்புகளுக்கு ஏற்ப இன்சூரன்ஸ் நிவாரணம் ஒதுக்கப்படுவதாக கணக்கீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தவிர கிண்டி அம்பத்தூர் பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெருமளவில் இயங்கி வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களில் வெள்ள சேதங்கள் கணக்கிடும் பணியும் தீவிர படுத்தப்பட்டிருப்பதாகவும் இதுவரை 1200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இன்சூரன்ஸ் பாலிசிக்கு ஏற்ப நிறுவனங்களுக்கான சேத மதிப்பீடு கண்டறிவதாக தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்