அண்ணா சாலையில் இடித்த பஸ்..ஆயிரம் விளக்கில் மடக்கிய கார் - சென்னையில் நடந்த களேபரம்

x

சென்னை அண்ணாசாலையில் கார் ஒன்றை முந்த முயன்றபோது, மாநகர பேருந்து காரை லேசாக உரசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் பேருந்தை நிறுத்துமாறு கூச்சலிட்ட நிலையில், ஆயிரம் விளக்கு பேருந்து நிலையம் அருகே பேருந்தை மடக்கி உள்ளார். பின்பு பேருந்து மற்றும் கார் ஓட்டுநர்கள் இருவரும் சாலையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்த போக்குவரத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்