கண்டத்தில் இருந்து தப்பும் சென்னை.. பெருமூச்சு விடலாம் மக்களே..!

x

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் புழல் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய ஏரியான புழல் ஏரிக்கு கடந்த சில நாட்களாக நீர் வரத்து இன்றி காணப்பட்டநிலையில் மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் புழல் ஏரிக்கு தற்போது 215 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது19.26 அடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்