சென்னை தி.நகரில் படுபயங்கரம்.. கிலோ கிலோவாக உருக்கிய தங்கம்.. அந்த ஒருவன் யார்?

x

சென்னை தியாகராயநகரில் உள்ள நகை பட்டறை ஒன்றில் 6 கிலோ உருக்கிய தங்கம் கொள்ளையடிக்கப்பட்டு தொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தியாகராயநகரைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் நந்தகுமார் ஜக்தாப், இன்று காலை கடையை திறந்துள்ளார். அப்போது, கடையில் இருந்த 6 கிலோ 400 கிராம் உருக்கிய தங்கம் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக மாம்பலம் காவல் நிலையத்தில் பட்டறை உரிமையாளர் நந்தகுமார்புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நகை பட்டறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகமூடி அணிந்த ஒருவர், பூட்டை திறந்து, பட்டறைக்குள் புகுந்து உருக்கி தங்கத்தை கேனில் பிடித்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இது தொடர்பாக பட்டறை ஊழியர்கள் அஸ்வின் உத்தம், ராகுல், மாதேவ், ரோகித், அனில், விநாயக் ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்