சென்னையில் 9 லட்சம் மக்களுக்கு..பிப்.24-ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

x

சென்னையில் 9 லட்சம் மக்களுக்கு..பிப்.24-ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

சென்னை அடுத்த நெம்மேலியில், கடல்நீரை குடிநீராக்கும் 2ஆவது சுத்திகரிப்பு ஆலை பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலை பயன்பாட்டில் உள்ளது. இங்கிருந்து தென் சென்னை பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆலைக்கு அருகிலேயே தினமும் 15 கோடி லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட 2-வது புதிய ஆலை 1,516 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 100 சதவீத பணிகள் முடிவடைந்து, இதனை வருகிற 24ம்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிலையில், கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையின் சோதனை ஓட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த ஆலையில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீரால், சென்னையில் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்